1. தமிழ்நாடு ரேக்ளா தலைமைச் சங்கம் எடுத்த பொது கட்டுப்பாடுகளின் படி, மாட்டை தூண்ட குச்சி மற்றும் சாட்டை தவிர வேற எந்த சாதனங்களையும் போட்டியின் போது பயன்படுத்தக் கூடாது.
  2. இந்த விளையாட்டில் மது அருந்திவிட்டு கலந்து கொள்ள கூடாது.
  3. ஏற்கால் அல்லது நுகம் உடைந்தால் தவிர ஆரம்பக் கோட்டை தாண்டி கொடி அசைத்தபின் எந்த காலையும் மீண்டும் ஓட்ட அனுமதிக்கப்பட மாட்டது.
  4. மின் நேரக் குறிப்பின் (டிஜிட்டல் டைமர்) பழுதடைந்தாலோ அல்லது மற்ற காரணங்களினால் பயன்படுத்த இயலவில்லை என்றாலோ ஸ்டாப் வாட்ச் பயன்படுத்தப்படும். அந்த நேரமே இறுதியானது அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  5. ரன்னிங் ஸ்டார்ட்(Running Sart) அனுமதிக்கப்பட மாட்டாது.
  6. ஸ்டார்டிங் பாக்சில் (Starting Box) ஓட்டுநர் நடத்துனர் தவிர வேறு யாரும் காளையை வேறு சாதனங்களை எந்த கொண்டும் எந்த முறையிலும் தாக்கவோ காளைகளை துன்புறுத்தவோ கூடாது.
  7. ஸ்டார்டிங் பாக்ஸ் (Starting Box) சாட்டையைத் தவிர வேறு எந்த சாதனமும் கொண்டுவரக் கூடாது. மீறினால் அந்த வீரர்கள் அல்லது வண்டி போட்டியிலிருந்து விலக்கப்படும்.
  8. 200 மீட்டர் அல்லது 300 மீட்டர் போட்டியலில் ஏதேனும் ஒன்றில் மட்டும் ஒரு காலை பங்கேற்க அனுமதிக்கப்படும்.
  9. 200 மீட்டர் போட்டிகளில் 4 பல், 4 பல்லுக்கு குறைவான காளைகள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படும்.
  10. ஒருமுறை விதிகளை மீறி பவுல் காரணமாக போட்டியிலிருந்து விளக்கப்பட்ட காளைகளை மீண்டும் அன்றே போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டது.
  11. போட்டி நடக்கும் பொழுது களத்தினுள் காளைகளை துரத்திக் கொண்டு செல்லக்கூடாது.
  12. ரேக்ளா கண்காணிப்பாளர்கள் (டைம் ஆசிரியர்கள்) அமரும் மேடையில் வேறு யாரும் அமர அனுமதி இல்லை.
  13. நிர்வாக குழு வழங்கும் தீர்ப்பே இறுதியானது.

Partners

These races are held in the southern districts of Tamil Nadu and Kongu.