Rekla Race
ரேக்ளா பதிவு அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ள வண்டி நம்பர் / போட்டி பெயர் / தொலைபேசி எண் / புகைப்படம் போன்றவற்றை மாற்றம் செய்ய முடியுமா? எவ்வாறு மாற்றம் செய்வது?
ஒருவர் ரேக்ளா பதிவு அட்டை பதிவு செய்யும் பொழுது அந்த பதிவு அட்டைக்காக பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து ரேக்ளா உதவி எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் புதிதாக மாற்றம் செய்ய விரும்பும் (வண்டி எண் / போட்டி பெயர் / மொபைல் நம்பர் / புகைப்படம்) தகவல்களை அனுப்பினால், அதனை மாற்றம் செய்து தரப்படும்.
புதிதாக ரேக்ளா பதிவு அட்டை பதிவு செய்வதற்கு எந்த எந்த ஆவணங்கள் தேவைப்படும்?
1) ஆதார் அடையாள அட்டையின் முன் மற்றும் பின்பக்க தெளிவான நகல்.
2) அவர்களுடைய தெளிவான புகைப்படம்.
3) ரூபாய் 500 பதிவு கட்டணம்.
4) தங்களுடைய போட்டி வண்டி எண்
5) போட்டிப் பெயர் (மைக்கில் படிக்க வேண்டிய பெயர்)
6) தங்களது நிரந்தர WhatsApp மொபைல் எண்
7) தங்களது இரத்த வகை (BLOOD GROUP)
ரேக்ளா போட்டி நடைபெறும் அன்று நேரில் வந்து வண்டி டோக்கன் பதிவு செய்ய முடியுமா?
முடியும்! மேலும் தகவல்களுக்கு ரேக்ளா உதவி எண்ணை (9943035035) தொடர்பு கொள்ளவும்.
பதிவு செய்யப்பட்ட வண்டி டோக்கனை கேன்சல் செய்ய முடியுமா?
சில நிபந்தைகளுடன் கேன்சல் செய்ய முடியும். இது குறித்து மேலும் தகவல்களுக்கு ரேக்ளா உதவியனான 99430 35035 தொடர்பு கொள்ளவும்.
ரேக்ளா போட்டியின் போது வண்டி பெயர் பதிவு செய்வதற்க்கு கட்டாயம் ரேக்ளா பதிவு அட்டையை கொண்டு வர வேண்டுமா?
தேவையில்லை! இருப்பினும் தங்களது ரேக்ளா பதிவு அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள TRP எண்ணை, வண்டி பெயர் பதிவு செய்பவர்களிடம் சொல்லி தங்களது பெயர் பதிவு செய்யலாம்.
ரேக்ளா பதிவு அட்டையை தவறுதலாக தொலைத்துவிட்டால் திரும்ப பெற முடியுமா?
ஆம் முடியும். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து ரேக்ளா உதவி எண்ணிற்கு தகவல் தெரிவிப்பதுடன், புதிய பதிவு அட்டைக்கான பணத்தை செலுத்துவதன் மூலமாக பெறலாம்.
ரேக்ளா பதிவு அட்டையின் எண்ணை (TRP NUMBER) மாற்றம் செய்ய முடியுமா?
ரேக்ளா பதிவு அட்டையின் எண்ணானது கணினி மூலமாக பெறக்கூடிய எண் ஆகும்.எனவே இதனில் மாற்றம் செய்ய இயலாது.




